2வது டெஸ்ட் - இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
x
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், இரண்டு இன்னிங்ஸ்களில் இந்திய அணி முறையே 325, 276 ரன்கள் எடுத்தது. அதேபோல், முதல் இன்னிங்சில் 62 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து அணி, 540 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன், இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. நேற்றைய ஆட்ட நேர முடிவில், அந்த அணி 140 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இன்னும் 5 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் உள்ள நிலையில், நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 400 ரன்கள் தேவைப்படுகிறது. அதேநேரம், எளிதில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி, வெற்றியை தன்வசமாக்க இந்திய அணி தீவிரமாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்