அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் - இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் மெத்வதேவ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் - இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் மெத்வதேவ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் - இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் மெத்வதேவ்
x
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் - இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் மெத்வதேவ் 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு உலகின் 2-ம் நிலை வீரர் டேனில் மெத்வதேவ் முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரர் மெத்வதேவ், கனடாவை சேர்ந்த இளம் வீரர் ஃபெலிக்சுடன் மோதினார். இந்த போட்டியில், அனுபவம் வாய்ந்த மெத்வதேவின் ஆட்டத்துக்கு கனடா வீரர் ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினார். இதனால், 6-க்கு 4, 7-க்கு 5, 6-க்கு 2 என்ற செட் கணக்கில் ஃபெலிக்சை வீழ்த்தி மெத்வதேவ் எளிதில் வெற்றி பெற்றார். இதன்மூலம், அமெரிக்க ஓபனின் இறுதிப் போட்டிக்கும் மெத்வதேவ் முன்னேறினார்.

Next Story

மேலும் செய்திகள்