பாராலிம்பிக் போட்டிகள் நிறைவுவிழா: முதல்முறையாக 24 வது இடத்தில் இந்தியா - தேசிய கொடியை ஏந்தி சென்ற அவானி லெகாரா

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 5 தங்கம் உள்பட 19 பதக்கங்கள் வென்று 24 வது இடத்தை பிடித்து பாரா ஒலிம்பிக்கை நிறைவு செய்துள்ளது இந்தியா...
பாராலிம்பிக் போட்டிகள் நிறைவுவிழா: முதல்முறையாக 24 வது இடத்தில் இந்தியா - தேசிய கொடியை ஏந்தி சென்ற அவானி லெகாரா
x
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆகஸ்ட் 24ந் தேதி தொடங்கிய பாராலிம்பிக் போட்டிகள்,  நிறைவு பெற்றன. வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற நிறைவு விழாவில், போட்டியில் பங்கேற்ற 163 நாடுகளின் வீரர், வீராங்கனைகள் தங்கள் நாட்டு கொடியுடன் அணிவகுத்தனர். இந்தியா சார்பில், தங்கம் மற்றும் வெண்கலம் என இரு பதக்கங்களை வென்ற அவானி லெகாரா, தேசியக் கொடியை ஏந்தி சென்றார். இந்த போட்டியில் அதிக பதக்கங்கள் வென்ற நாடுகளின் பட்டியலில், 19 பதக்கங்களுடன் இந்தியா 24 வது இடத்தை பிடித்துள்ளது. 
 

Next Story

மேலும் செய்திகள்