தங்க மகள் அவனியின் மற்றொரு சாதனை - எஞ்சியுள்ள 1 போட்டியிலும் பதக்கம் வெல்வாரா ?

பாரா ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளார், இந்திய வீராங்கனை அவனி லெஹாரா. அவரின் சாதனை பயணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
தங்க மகள் அவனியின் மற்றொரு சாதனை - எஞ்சியுள்ள 1 போட்டியிலும் பதக்கம் வெல்வாரா ?
x
ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. தனது அறிமுக தொடரிலேயே 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைந்த அவனி,  தற்போது 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெண்கலம் வென்று மீண்டும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். இந்திய வீராங்கனை ஒருவர் பாரா ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் பெறுவது இதுவே முதல்முறை என்பதால் ஒட்டுமொத்த தேசமும் தங்க மகள் அவனியை கொண்டாடி வருகிறது... 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்றில் இவர் 249.5 புள்ளிகள் பெற்று, தங்கம் வென்றது மட்டுமின்றி உலக சாதனை படைத்திருந்தார், அவனி தற்போது 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் சீனா தங்கமும், ஜெர்மனி வெள்ளியும் வென்ற நிலையில், இந்தியா சார்பில் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார், அவனி. கடந்த 1984ஆம் ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர் ஜோகிந்தர் சிங், மூன்று வெவ்வேறு பிரிவுகளில் மூன்று பதக்கங்களை வென்றிருந்ததே தற்போது வரை சாதனையாக தொடர்கிறது... 
இந்நிலையில், அவனி லெஹாராவிற்கு இந்த தொடரில் இன்னும் ஒரு போட்டி எஞ்சியிருப்பதால்.... அதில் பதக்கம் வென்றால், ஜோகிந்தர் சிங்கின் சாதனையை அவர் சமன் செய்வதோடு, ஒரே விளையாட்டில் மூன்று பதக்கங்கள் வென்ற இந்தியர் என்ற சாதனையும் அவர் வசமாகும். ராஜஸ்தானை சேர்ந்த 19 வயதான அவனி, கடந்த 2012ம் ஆண்டு நடந்த கார் விபத்தால் முதுகு தண்டுவட பாதிப்பால் மாற்றுத்திறனாளி ஆனார்.. 
எதிர்பாராத இந்த துயரத்தால் கோபத்திற்கு ஆளான அவனி, யாரிடமும் பேசாமல் தனிமையை விரும்பியுள்ளார்.  பிறகு தந்தையின் முயற்சியால் கடந்த 2015ம் ஆண்டு முதல் துப்பாக்கி சூடுதலில் பயிற்சி பெற்று வந்துள்ளார்... 
ஒலிம்பிக்கில் துப்பாக்கி சூடுதல் பிரிவில் இந்தியாவிற்கு முதல் தங்கம் வென்று கொடுத்த அபினவ் பிந்த்ராவின் சுயசரிதை புத்தகம், அவனியின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது... இப்படி மனமுடைந்து போன சிறுமி அவனி, தனது தன்னம்பிக்கையால் தற்போது உலகே பாராட்டும் இளம் வீராங்கனையாக மாறி, பலருக்கும் சிறந்த முன்மாதிரியாக உயர்ந்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்