பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டி: வெண்கலம் வென்றார் சிங்ராஜ் அதானா

டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஆடவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சிங்ராஜ் அதானா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார்.
பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டி: வெண்கலம் வென்றார் சிங்ராஜ் அதானா
x
ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியா சார்பில், சிங்ராஜ் அதானாவும் மனீஷ் நர்வாலும் பங்கேற்றனர். இதில், இலக்கை துல்லியமாக குறிவைத்த சிங்ராஜ் அதானா, 216 புள்ளி 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பிடித்து, வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம், டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்து உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்