டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடக்க விழா : "டெக் சந்த் தலைமையில் இந்தியா அணிவகுப்பு"

டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடக்க விழாவில் தமிழக வீரர் மாரியப்பனுக்கு பதில், டெக் சந்த் தேசியக் கொடியை ஏந்திச் செல்வார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடக்க விழா : டெக் சந்த் தலைமையில் இந்தியா அணிவகுப்பு
x
ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று மாலை 4.30 மணிக்கு பாரா ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், தமிழக தடகள வீரர் மாரியப்பன், தேசியக் கொடியை ஏந்தி இந்திய அணியை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மாரியப்பனுக்கு பதிலாக ஈட்டியெறிதல் வீரர் டெக் சந்த், அணிவகுப்பை தலைமை தாங்குவார் என்று இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்து உள்ளது. மாரியப்பன் வந்த விமானத்தில், ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், மாரியப்பன் உள்பட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் அவர் அணிவகுப்பை வழிநடத்த மாட்டார் என்றும் கூறப்பட்டு உள்ளது. மாரியப்பனுக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ளபோதும், போட்டி விதிமுறைகளின்படி அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்