டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை... முதல் ஒலிம்பிக்கிலேயே லவ்லினா சாதனை

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை... முதல் ஒலிம்பிக்கிலேயே லவ்லினா சாதனை
x
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை... முதல் ஒலிம்பிக்கிலேயே லவ்லினா சாதனை

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்ஹோஹைன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.இன்று நடைபெற்ற மகளிர் 69 கிலோ எடைப்பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், துருக்கியை சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை சுர்மனேலியுடன் இந்திய வீராங்கனை லவ்லினா மோதினார். 3 சுற்றுகளாக நடந்த இந்த போட்டியில் துருக்கி வீராங்கனை சுர்மனேலி நேர்த்தியான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், 5-க்கு பூஜ்யம் என்ற புள்ளிகள் கணக்கில் சுர்மனேலி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். போட்டியில் தோல்வி அடைந்தாலும், அரையிறுதி வரை முன்னேறியதால் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம், தான் பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே வெண்கல பதக்கம் வென்று லவ்லினா சாதனை படைத்து உள்ளார். மேலும், டோக்கியோ ஒலிம்பிக்கில், மீராபாய் சானு, சிந்துவைத் தொடர்ந்து, லவ்லினாவால் இந்தியாவிற்கு 3-வது பதக்கம் கிடைத்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்