டோக்கியோ ஒலிம்பிக் டிராக் சைக்கிள் போட்டி: திடீரென்று கழன்ற சைக்கிளின் கைப்பிடிகள் - தவறி விழுந்த ஆஸி. வீரர்
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் டிராக் சைக்கிளிங் போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆஸ்திரேலிய வீரர் அலெக்சாண்டர் போர்ட்டர் ஓட்டிய சைக்கிளின் கைப்பிடிகள், போட்டியின்போது திடீரென்று கழன்று விழுந்தன. இதனால், அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த ஆஸ்திரேலிய வீரர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இந்த விபத்தில், அவர் லேசான காயம் அடைந்த நிலையில், போட்டி விதிகளின்படி மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
Next Story

