டோக்கியோ ஒலிம்பிக் கால்பந்து போட்டி : மெக்சிகோ - பிரேசில் இன்று பலப்பரீட்சை

டோக்கியோ ஒலிம்பிக் கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற உள்ளன.
x
டோக்கியோ ஒலிம்பிக் கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற உள்ளன. டோக்கியோ நகரில் இன்று மதியம் நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில், பலம் வாய்ந்த பிரேசில் அணியை மெக்சிகோ சந்திக்க உள்ளது. இதேபோல், இன்று மாலை நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஜப்பான், ஸ்பெயினுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இவ்விரு போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகள், 7-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் தங்கப் பதக்கத்துக்கு விளையாட உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்