பதக்கத்தை உறுதிப்படுத்துவாரா சிந்து..? - ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையுடன், இந்திய வீராங்கனை பி.வி. சிந்து இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
x
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையுடன், இந்திய வீராங்கனை பி.வி. சிந்து இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளார். காலிறுதியில் ஜப்பான் வீராங்கனை யமகுச்சியை வீழ்த்தி, பி.வி. சிந்து அரையிறுதிக்குள் நுழைந்தார். இந்நிலையில், இன்று மதியம் மூன்று மணியளவில் நடைபெறும் அரையிறுதியில், சீன தைபேவை சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை தாய் சு யிங்கை, சிந்து சந்திக்கிறார். இதில் சிந்து வெற்றி பெற்றால், இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் உறுதியாகிவிடும். இவ்விரு வீராங்கனைகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதி உள்ள நிலையில், 13 முறை தாய் சு யிங்கும், 5 முறை பி.வி. சிந்துவும் வென்று உள்ளனர்.   


Next Story

மேலும் செய்திகள்