அரையிறுதிக்கு இந்தியாவின் லவ்லினா தகுதி - மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் வாழ்த்து

டோக்கியோ ஒலிம்பிக்கில், இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கத்தை உறுதி செய்துள்ள குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்ஹோயெயினுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
x
டோக்கியோ ஒலிம்பிக்கில், இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கத்தை உறுதி செய்துள்ள குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்ஹோயெயினுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர், லவ்லினாவின் ஆட்டத்தை மெய்மறந்து பார்த்ததாகவும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லவ்லினாவுக்கு வாழ்த்துகள் என்றும் கூறி உள்ளார். இதேபோல், மத்திய விளையாட்டுத்துறை இணை அமைச்சர் நிஸித் ப்ரமனிக், அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்டோரும் லவ்லினாவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்