டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்திய ஜோடி வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியின் தகுதிச் சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்ற நிலையில், குறைவான புள்ளிகளைப் பெற்றதால் காலிறுதிக்கு தகுதி பெற முடியாமல் போனது.
x
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியின் தகுதிச் சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்ற நிலையில், குறைவான புள்ளிகளைப் பெற்றதால் காலிறுதிக்கு தகுதி பெற முடியாமல் போனது. குரூப் ஏ பிரிவில் இன்று நடந்த தகுதி சுற்று ஆட்டத்தில், இந்தியாவின் சாய்ராஜ் - சிராக் ஜோடி, பிரிட்டனின் லேன் - வென்டி ஜோடியுடன் மோதியது. இதில் இந்திய ஜோடி நேர் செட்களில் வெற்றி பெற்றது. இருப்பினும், குரூப் ஏ பிரிவில் குறைவான புள்ளிகளையே பெற்றதால், இந்திய ஜோடி காலிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. குரூப் ஏ பிரிவில் இந்தோனேசியா மற்றும் சீன தைபே அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

Next Story

மேலும் செய்திகள்