டோக்கியோ ஒலிம்பிக் - டிரையாத்லான் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற பெர்முடா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் சின்னஞ்சிறு தீவான பெர்முடா, தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளது.
x
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் சின்னஞ்சிறு தீவான பெர்முடா, தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளது. மகளிர் டிரையாத்லான் போட்டிகளில் பெர்முடா வீராங்கனை ஃபுளோரா டஃபி, பந்தய தூரத்தை 1 மணி 55 நிமிடங்களில் கடந்து தங்கப் பதக்கம் வென்று உள்ளார். இதன்மூலம், ஒலிம்பிக் போட்டிகளில் பெர்முடா தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றது. மேலும், ஒலிம்பிக் வரலாற்றில், மக்கள் தொகை அடிப்படையில் மிகச்சிறிய நாடு, தங்கப் பதக்கம் வெல்வதும் இதுவே முதல் முறை ஆகும்.

Next Story

மேலும் செய்திகள்