டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டி - ஸ்பெயினை வீழ்த்தி இந்தியா அபாரம்

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில், ஸ்பெயினை 3-க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இந்தியா அபார வெற்றி பெற்றது.
x
கடந்த லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் மோசமான தோல்வியை சந்தித்த இந்தியா, இன்று ஸ்பெயினுடன் மோதியது. ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் இந்திய வீரர் சிம்ரஞ்சித் சிங், கோல் அடித்த நிலையில், அதற்கடுத்த நிமிடத்திலேயே ருபிந்தர் பால் சிங், பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார். இதனால், முதல் பாதியில் 2-க்கு பூஜ்யம் என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடந்த 2-வது பாதியில் இந்திய வீரர் ருபிந்தர் பால் சிங் மேலும் ஒரு கோல் அடிக்க, ஸ்பெயின் வீரர்கள் கோல் அடிக்க முடியாமல் தடுமாறினர். இதனால், ஆட்ட நேர முடிவில் 3-க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியா தனது அடுத்த லீக் ஆட்டத்தில், அர்ஜென்டினாவை நாளை மறுதினம் எதிர்கொள்ள உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்