பார்வையாளர்கள் இன்றி நடக்கும் டி.என்.பி.எல். - நேரில் செல்ல முடியாத ரசிகர்களின் மனநிலை?

டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் பார்வையாளர்கள் இன்றி நடைபெற்று வரும் நிலையில், மைதானத்திற்கு செல்ல முடியாத ரசிகர்களின் மனநிலை என்ன?
பார்வையாளர்கள் இன்றி நடக்கும் டி.என்.பி.எல். - நேரில் செல்ல முடியாத ரசிகர்களின் மனநிலை?
x
டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் பார்வையாளர்கள் இன்றி நடைபெற்று வரும் நிலையில், மைதானத்திற்கு செல்ல முடியாத ரசிகர்களின் மனநிலை என்ன? என்பது பற்றி பார்க்கலாம்..இந்தியாவின் மிகப் பழமையான கிரிக்கெட் மைதானங்களுள் ஒன்று, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம். சுமார் 50 ஆயிரம் பார்வையாளர்கள் வரை அமரக்கூடிய மைதானம் என்பதால், சர்வதேச போட்டிகள் முதல் ஐபிஎல், டிஎன்பிஎல் என எந்தப் போட்டி நடந்தாலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். 
முக்கியமான போட்டிகளின் போது, டிக்கெட் வாங்குவதற்கே பலநூறு மீட்டர் தூரத்திற்கு ரசிகர்கள் வரிசையில் காத்திருப்பதே, அதற்கு உதாரணம். இந்த சூழலில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும், டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் பார்வையாளர்கள் இன்றி நடைபெற்று வருகிறது.இதனால் ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது சேப்பாக்கம் மைதானம்.கிரிக்கெட் என்றாலே தனி உற்சாகம் பிறக்கும் வேளையில், மைதானத்திற்கே நேரில் சென்று கண்டு களிக்கும் ரசிகர்கள், இதனை பெருத்த ஏமாற்றமாகவே பார்க்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்