2013 வரை பளுதூக்குதலில் கலக்கிய வீரர் - பாலின மாறுபாடால் திருநங்கையானார்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் பளுத்தூக்கும் போட்டியில் திருநங்கை ஒருவர் பங்கேற்பதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதன் பின்னணி குறித்து விரிவாக பார்ப்போம்....
2013 வரை பளுதூக்குதலில் கலக்கிய வீரர் - பாலின மாறுபாடால் திருநங்கையானார்
x
நியூசிலாந்தைச் சேர்ந்தவரான இவர் ஜூனியர், சீனியர் பிரிவு பளுதூக்கும் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றவர். குறிப்பாக 2012ஆம் ஆண்டு நியூசிலாந்து பளுதூக்கும் அணியின் சிறப்பு அதிகாரியாக பதவி வகித்து வந்த லாரல் ஹப்பார்ட்டின் இயற்பெயர் GAVIN.2013க்கு பின்னர் ஏற்பட்ட பாலின மாறுபாட்டால் திருநங்கையாக மாறிய GAVIN, தனது பெயரை லாரல் ஹப்பார்ட் என மாற்றிக்கொண்டார்.இவரது பெயர் தற்போது விளையாட்டு உலகில் கவனத்தை பெற்றதோடு, பேசுபொருளாக மாறியுள்ளது.
காரணம் ஒலிம்பிக் கமிட்டி கொண்டு வந்த சமீபத்திய முடிவு தான். 
ஒலிம்பிக் போட்டிகளில் மூன்றாம் பாலினத்தவர்கள் பங்கு பெற முதன் முறையாக அனுமதி அளித்ததை தொடர்ந்து, அதன் விதிமுறைகளின் படி மகளிர் 87 கிலோ பிரிவில் விளையாட தகுதி பெற்றுள்ளார் லாரல் ஹப்பார்ட்.
ஆனால் நியூசிலாந்து அணி இதுவரை அவரை ஒலிம்பிக்கிற்கு தேர்வு செய்யாத நிலையில், அதற்கு முன்னரே பல முன்னணி வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி விட்டனர்.குறிப்பாக அவரது பிரிவான 87 கிலோ எடை பிரிவில் இடம்பிடித்துள்ள பெல்ஜிய வீராங்கனை அன்னா வான்பெலிங்கென், அவரை அனுமதிக்கக் கூடாது என போர்க்கொடி உயர்த்தியுள்ளார். மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை தான் மதிப்பதாகவும், ஆனால் 43 வயது வரை ஆணாக இருந்தவரின் உடல் வலிமை, பெண்களை விட மிக அதிகமாக இருக்கும் என்பதால் ஒலிம்பிக் கமிட்டியின் முடிவு சிரிப்பை வரவழைப்பதாக விமர்சித்துள்ளார்.திருநங்கை ஒருவர் ஒலிம்பிக்கில் பங்கேற்பது கவனத்தை பெற்றாலும், புதிய விதிகளுக்கு எதிர்ப்பு குரல்களும் வலுத்துள்ளன....


Next Story

மேலும் செய்திகள்