விளையாட்டு போட்டி நடத்த விதிமுறைகள் என்ன? - மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்

விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
விளையாட்டு போட்டி நடத்த விதிமுறைகள் என்ன? - மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்
x
விளையாட்டு வீரர்கள் உடன் இருப்பவர்கள் விளையாட்டு நடைபெறும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், 6 அடி தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். விளையாட்டு நேரம் தவிர மற்ற நேரங்களில் சானிடைசர் கொண்டு 40-60 வினாடிகளுக்கு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். வீரர்கள் மற்றும் உடன் இருப்பவர்கள் இருமல், தும்மல் ஏற்பட்டால் கைக்குட்டையை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். 

போட்டிகள் நடைபெறும் போது , உடற்பயிற்சி செய்யும் நேரம் , விளையாட்டு வீரர்கள் ஒரே நேரத்தில் பயணம் மேற்கொள்ளும் போது  எச்சில் உமிழ்தல் கூடாது. விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடத்தில் கொரோனா விழிப்புணர்வு குழுவை தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும். 

விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பணியாற்றும் ஊழியர்களுடன் எந்த ஒரு நேரடி தொடர்பும் வைத்திருக்க கூடாது. விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடம் மற்றும்  வீரர்கள் தங்கும் விடுதிகள் கட்டுப்படுத்த பகுதியில் இருக்க கூடாது. உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு மாற்று இடம் தேர்வு செய்து கொள்ளலாம். 

விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ள இடம் அல்லது  வீரர்கள் தங்கியுள்ள அறைகள் உள்ளிட்டவை அடிக்கடி சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக மேஜை , நாற்காலிகள், கதவின் கைப்பிடி , கழிவறை உள்ளிட்டவை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். 

விளையாட்டு போட்டிகளின் நடுவில் விளையாட்டு பொருட்களை சுத்தம் செய்யும் வகையில் நேரம் ஒதுக்கி விளையாட்டு அட்டவணை தயாரிக்க வேண்டும். போட்டிகளில் நேரடியாக கலந்து கொள்ள அவசியமில்லை எனும் நபர்கள் விடியோ கான்பிரன்ஸ் மூலம் பங்கெடுத்து கொள்ளலாம். விளையாட்டு போட்டி நடைபெறும் இடங்களில் அதிக கூட்டத்தை கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

சிறிய அறைகளில் அதிகமான கூட்டம் சேராமல் தடுப்பதோடு, காற்றோட்டம் நன்றாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குளிர்சாதன வசதி பயணப்படுத்தப்படும் பட்சத்தில் 24-30 C என்ற அளவில் பராமரிக்க வேண்டும். 

விளையாட்டு வீரர்கள், விளையாட்டு போட்டிகளை காண வருபவர்கள் உள்ளிட்டோரை பரிசோதிக்க வெப்பமாணி போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்யவேண்டும். மேலும், பயன்படுத்தப்படும் முக ககவசம், கையுறைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்த  போதுமான அளவு குப்பை தொட்டிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

யாருக்காவது, சளி , இருமல், மூச்சுத்திணறல் இருந்தால் அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட  அறைகளில் வைத்துவிட்டு,  அருகாமையுள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். 
இவ்வாறு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்