ஷாருக்கானின் புதிய டி20 கிரிக்கெட் அணி

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரில் ஒரு அணியை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஷாருக்கானின் புதிய டி20 கிரிக்கெட் அணி
x
இந்தியாவில் உள்ள ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் போல் அமெரிக்காவில் எம்.எல்.சி. என்ற டி20 கிரிக்கெட் தொடரை 2022-ம் ஆண்டு நடத்த அமெரிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது. 6 அணிகள் கலந்து கொள்ள உள்ள நிலையில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரை மையமாக கொண்டு உருவாக உள்ள அணியை வாங்க ஷாருக்கானின்  நைட ரைடர்ஸ் அணி நிர்வாகம் முனைப்பு காட்டி வருவதாகவும், அதற்கு லா நைட் ரைடர்ஸ் என்று பெயர்சூட்ட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஷாருக்கானுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட அணிகள் சொந்தமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.       


Next Story

மேலும் செய்திகள்