"கொரோனா பரப்பும் செயலில் அதிபர் டிரம்ப்" - டிரம்ப் பேரணி குறித்து ஜோ பிடன் கடும் விமர்சனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்தும் பேரணி மூலம் அதிக அளவில் கொரோனா பரவுவதாக ஜோ பிடன் குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனா பரப்பும் செயலில் அதிபர் டிரம்ப் - டிரம்ப் பேரணி குறித்து ஜோ பிடன் கடும் விமர்சனம்
x
ஃப்ளோரிடா மாகாணத்தில் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் ஆகிய இருவரும் ஈடுபட்டனர். முன்னதாக டிரம்ப் நடத்திய பேரணியில் அவரது ஆதரவாளர்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கூட்டமாக குவிந்தனர். இதன் பின்னர், ஜோ பிடன் தலைமையில் நடைபெற்ற பேரணியில், பொதுமக்கள் அவர்களது காரின் அருகேயும், காருக்குள்ளையும் அமர்ந்தவாறு பங்கேற்றனர். அப்போது கொரோனா பரப்பும் நிகழ்வுகளை அதிபர் டிரம்ப் நடத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்