இந்திய அணிக்கு தேர்வானது நம்பமுடியாத விஷயம் - தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி

இந்திய அணிக்கு தேர்வானது நம்பமுடியாத விஷயம் என்று தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். ஐ.பி.எல்.லில் கொல்கத்தா அணிக்காக ஆடி வரும் வருண் சக்கரவர்த்தி, அடுத்த மாதம் தொடங்க உள்ள ஆஸ்திரேலியா தொடருக்கான 20 ஓவர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்கு தேர்வானது நம்பமுடியாத விஷயம் -  தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி
x
இந்திய அணிக்கு தேர்வானது நம்பமுடியாத விஷயம் என்று தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். ஐ.பி.எல்.லில் கொல்கத்தா அணிக்காக ஆடி வரும் வருண் சக்கரவர்த்தி, அடுத்த மாதம் தொடங்க உள்ள ஆஸ்திரேலியா தொடருக்கான 20 ஓவர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவேன் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை. வந்த வாய்ப்பை நழுவ விடாமல் அணியின் நிரந்தர இடத்தை பெற முயற்சிப்பேன். அணிக்கு தேர்வானது எனது குடும்பத்தினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. என்னை தேர்வு செய்த தேர்வாளர்களுக்கு நன்றி கடன் பட்டு உள்ளேன் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்