ராஜஸ்தானை வீழ்த்தியது ஐதராபாத் - மனீஷ் பாண்டே அபாரம்

ஐ.பி.எல் 40 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை எதிர்கொண்ட ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தானை வீழ்த்தியது ஐதராபாத் - மனீஷ் பாண்டே அபாரம்
x
துபாய் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்று முதலில் பந்துவீச தீர்மானித்த‌து  ஐதராபாத். அதன்படி இந்த சீசனில் முதல் ஐபிஎல் போட்டியில் ஐதரபாத் அணிக்காக முதல் போட்டியில் களமிறங்கும் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுளை கைப்பற்றினார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி, 6 விக்கெட்களை இழந்து 154 ரன்கள் எடுத்த‌து. தொடர்ந்து களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்கார‌ர்கள் 16 ரன்களிலேயே அடுத்த‌டுத்து வெளியேறினர். இருந்த போதும், அடுத்து வந்த மனீஸ் பாண்டே ஒரு புறம் அதிரடி காட்ட, மற்றொரு புறம் தமிழக வீர‌ர் விஜய்சங்கர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெறச் செய்தனர். 8 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்த மனீஷ் பாண்டே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

ஐபிஎல் - சென்னை vs மும்பை

ஐபிஎல் 41 வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி மும்பையுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. சார்ஜா மைதானத்தில் நடக்கும் இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் மும்பை அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும். சென்னை அணி வெற்றி பெறும் பட்சத்தில் சென்னை எப்படியாவது play off க்கு சென்றுவிடும் என நம்பும்  ரசிகர்களுக்கு ஆறுதலாய் அமையும்.


Next Story

மேலும் செய்திகள்