பெங்களூருவை வீழ்த்தியது பஞ்சாப் - இறுதி பந்தில் திரில் வெற்றி
ஐ.பி.எல் 31 வது போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி பஞ்சாப் திரில் வெற்றி பெற்றுள்ளது.
டாஸ்வென்று பேட்டிங்கை தேர்வு செய்த பெங்களூரு அணியில், அதிக பட்சமாக கேப்டன் கோலி 48 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி சார்பாக தமிழக வீரர் முருகன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியில்,கே.எல்.ராகுல் 61, அகர்வால் 45, கெய்ல்,53 என வந்த வீரர்கள் அனைவரும் தங்கள் பங்கிற்கு அதிரடி காட்டினர். இறுதி ஓவரில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில், சஹால் சிறப்பாக பந்துவீசினார். கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்டபோது, கெய்ல் ரன் அவுட் ஆக, தொடர்ந்து வந்த பூரான் சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார்.
Next Story