ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்- டெல்லி கேபிடல்ஸ் அபார வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 23-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்- டெல்லி கேபிடல்ஸ் அபார வெற்றி
x
சார்ஜாவில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹெட்மயர் 45 ரன்கள் அடித்தார். பின்னர்185 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. 19.4 ஓவர்கள் முடிவில் 138 ரன்களுக்கு ராஜஸ்தான் அணி ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 46 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் ரபாடா மற்றும் நார்ட்ஜே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Next Story

மேலும் செய்திகள்