ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி - சென்னை அணி முதல் தோல்வி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் , சென்னை அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி - சென்னை அணி முதல் தோல்வி
x
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் , சென்னை அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷார்ஜாவில் நடந்த இந்த ஆட்டத்தில், முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி,  7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது. சாம்சன் 9 சிக்ஸர்கள் அடித்து, 74 ரன்கள் விளாசினார். கடைசி ஓவரில் ஆர்ச்சர் 4 சிக்ஸர்கள் விளாச ராஜஸ்தானுக்கு 30 ரன்கள் கிடைத்தது. இமாலய இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. பாப் டூ பிளெஸிஸ் அதிரடியாக ஆடி 7 சிக்ஸர்கள் விளாசி 72 ரன்கள் குவித்தார். தோனி கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தார். சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.Next Story

மேலும் செய்திகள்