இன்று சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதல் - எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு ?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது. போட்டியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.?
இன்று சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதல் - எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு ?
x
13வது ஐபிஎல் தொடரின் , 4வது லீக் ஆட்டத்தில், 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 1 முறை சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 14 முறையும் , ராஜஸ்தான் அணி 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இவ்விரு அணிகள் மோதிய இரண்டு போட்டிகளிலும் சென்னை அணியே வாகை சூடி உள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியின் தொடக்க வீரர்கள் வாட்சன் , விஜய்யை தவிர மற்ற அனைவருமே சிறப்பாக ஆடினர். தோனி, அனுபவம் மிக்க வீரர்களை எப்போதும் அதிகம் நம்புவதால், அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என தெரிகிறது. அதேநேரம், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணி,  தங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. பட்லர் , ஸ்டோக்ஸ் இல்லாத சூழலில் ஸ்மித் , ஜோஃப்ரா ஆர்ச்சர் , டேவிட் மில்லர் ஆகியோரையே ராஜஸ்தான் அதிகம் நம்பி இருக்கிறது. ஷார்ஜாவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சையே தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது. சரியான கலவையுடன் காணப்படுவதால்  சென்னை அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், ராஜஸ்தான் அணி வெற்றி பெற மிக கடுமையாக போராட வேண்டி இருக்கும் எனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். Next Story

மேலும் செய்திகள்