ஐபிஎல் அட்டவணை வெளியீடு : முதல் போட்டியில் சென்னை - மும்பை மோதல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள 13ஆவது ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் அட்டவணை வெளியீடு : முதல் போட்டியில் சென்னை - மும்பை மோதல்
x
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள 13ஆவது ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 19ஆம் தேதி அபுதாபியில் தொடங்கும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி மதியம் 3.30 மணி மற்றும் மாலை 7.30 மணிக்கு போட்டி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர்19ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை மொத்தம் 56 லீக் போட்டிகள் நடப்பு தொடரில் நடைபெற உள்ளன. 

ஐபிஎல்  அட்டவணை

சென்னை அணி மோதும் போட்டிகள்

செப்.19 சனி - மும்பை இந்தியன்ஸ்

செப்.22 செவ்வாய் - ராஜஸ்தான் ராயல்ஸ்

செப்.25 வெள்ளி - டெல்லி கேப்பிட்டல்ஸ்
------

அக்.02 வெள்ளி -  சன்ரைசர்ஸ் ஐதராபாத்

அக்.04 ஞாயிறு - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

அக்.07 புதன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
------

அக்.10 சனி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

அக்.13 செவ்வாய் - சன்ரைசர்ஸ் ஐதராபாத்

அக்.17 சனி - டெல்லி கேப்பிட்டல்ஸ்
------

அக்.19 திங்கள் - ராஜஸ்தான் ராயல்ஸ்

அக்.23 வெள்ளி - மும்பை இந்தியன்ஸ்

அக்.25 ஞாயிறு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
------

அக்.29 வியாழன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

நவ.01 ஞாயிறு - கிங்ஸ் லெவன் பஞ்சாப்
------

பெரும்பாலான போட்டிகள் இரவு 7:30 மணியளவில் தொடங்கும். அக்.25, நவ. 1 ஆகிய தேதிகளில் மட்டும் பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்கும்.


Next Story

மேலும் செய்திகள்