"இந்தியாவுக்கு எதிரான 4-வது டி-20 போட்டி : சூப்பர் ஓவரில் இந்திய அணி அசத்தல் வெற்றி"

டி-20 தொடரில், 2-வது முறையாக போட்டி சமன்
இந்தியாவுக்கு எதிரான 4-வது டி-20 போட்டி : சூப்பர் ஓவரில் இந்திய அணி அசத்தல் வெற்றி
x
நியூசிலாந்திற்கு எதிரான 4-வது டி-20 போட்டியில், சூப்பர் ஓவரில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. வெலிங்டனில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது. பின்னர், ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்தது. போட்டி சமனிலை பெற்றதால் சூப்பர் ஓவர் முறை  கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி  ஒரு விக்கெட் இழப்பிற்கு 13 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 5 பந்துகளில் வெற்றி இலக்கை எட்டி, டி-20 தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்