ஜாக்பாட் அடித்த வெளிநாட்டு வீரர்கள்

கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரர்கள் பற்றிய செய்தி தொகுப்பு.
x
முதல் வீரராக அறிவிக்கப்பட்ட அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் லின்னை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. அடுத்ததாக அறிவிக்கப்பட்ட, இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கனை கொல்கத்தா நைர் ரைடர்ஸ் நிர்வாகம் 5 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. அதிரடி ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்லை பஞ்சாப் அணி 10 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸை  வாங்க டெல்லி , பெங்களூர் அணிகள் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் , கொல்கத்தா அணி அவரை 15 கோடியே 50 லட்சம் ரூபாய்க்க்கு ஏலம் எடுத்தது.  தென்னாப்பிரிக்க வீரர் சிறிஸ் மோரிசை ரூ.10 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலம் எடுத்தது. விக்கெட் வீழ்த்திய பின் சல்யூர் அடித்து கொண்டாடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்  ஷெல்டோன் கொட்ரெலை 8 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது கிங்ஸ் 11 பஞ்சாப். அதன் பின் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெட்மேயரை 7 கோடியே 75 லட்ச ரூபாய்க்கும், ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மார்க்ஸ் ஸ்டோய்னிஸை 4 கோடியே 80 லட்ச ரூபாக்கும் வாங்கியது..


Next Story

மேலும் செய்திகள்