"ஐ.பி.எல். ஏலத்தில் சென்னை அணி விலைக்கு வாங்கிய வீரர்கள்"

ஹர்பஜன் , ஜடேஜா சுழல் கூட்டணியில் சாவ்லா
x
ஏலத்தில் பங்கேற்ற சென்னை அணியிடம் 14 கோடியே 60 லட்சம் ரூபாய் இருப்புத்தொகை இருந்தது. 2 வெளிநாட்டு வீரர்களை வாங்க வேண்டிய கட்டாயத்துடன் கோதாவில் குதித்த சென்னை ஏலம் தொடங்கிய போது வீரர்களை வாங்க பெருமளவு ஆர்வம் காட்டவில்லை , இதனையடுத்து ஆல் ரவுண்டர்கள் பட்டியலில்  முதலாவதாக இங்கிலாந்து வீரர் சாம் குர்ரன் பெயர் வாசிக்கப்பட்டது. 

* அவரது அடிப்படை ஏலத் தொகை1 கோடி ரூபாய் என்பதால் டெல்லி அணியும் , சென்னை அணிக்கு சவால் அளித்தது , மாறி மாறி இரு அணிகளும் போட்டி போட இறுதியாக சென்னை அணி அவரை 5 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. 

* அதன் பின்னர் சுழற்பந்து வீச்சாளர் பியுஷ் சாவ்லாவை பஞ்சாப் அணியுடன் மல்லுக்கட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் 6 கோடியே 75 லட்சம் ரூபாக்கு வாங்கியது.

* இறுதியாக சென்னை அணி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜாஷ் ஹேசில்வுட்டை அவரது அடிப்படை ஏலத் தொகையான இரண்டு கோடி ரூபாய்க்கு வாங்கியது.

Next Story

மேலும் செய்திகள்