இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒரு நாள் போட்டி : ஹெட்மேயர், ஹோப் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒரு நாள் போட்டி : ஹெட்மேயர், ஹோப் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
x
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையாத போதிலும், மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர் - பந்த் இணை நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் 70 ரன்களும் , ரிஷப் பந்த் 71 ரன்கள் விளாசினர். 288 இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இந்திய அணி பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு துரிதமாக ரன்கள் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஹெட்மேயர் 139 ரன்களும், ஷாய் ஹோப் 102 ரன்கள் விளாசி இலக்கை அடைய உதவினர். அந்த அணி 13 பந்துகளை மீதம் வைத்து 291 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 1க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 



Next Story

மேலும் செய்திகள்