அடுத்த ஆண்டு டி-20 உலகக் கோப்பை : "புவனேஸ்வர் குமார் களமிறங்குவது சந்தேகம்"

அடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பைக்கு தொடருக்கு முன்னதாக புதிய வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிக்க உள்ளதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு டி-20 உலகக் கோப்பை : புவனேஸ்வர் குமார் களமிறங்குவது சந்தேகம்
x
அடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பைக்கு தொடருக்கு முன்னதாக புதிய வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிக்க உள்ளதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் தெரிவித்துள்ளார். இந்திய, மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி சென்னையில் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெறுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாரத் அருண், காயம் காரணமாக முதல் ஒருநாள் போட்டியில் புவனேஸ்வர் குமார் களமிறங்குவதில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்தார். இந்த தொடரில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை போட்டியை மனதில் வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாரத் அருண் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்