2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஒருநாள் போட்டி : மீண்டும் களைகட்டிய சேப்பாக்கம் மைதானம்

2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஒருநாள் போட்டி : மீண்டும் களைகட்டிய சேப்பாக்கம் மைதானம்
x
2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளதால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இறுதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியா சேப்பாக்கம் மண்ணில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. அதன் பின் 2 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகள் இங்கு நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், தற்போது வரும் ஞாயிற்று கிழமை மேற்கு இந்திய தீவுகள் அணியை எதிர்கொள்ள உள்ளது. மேற்கு இந்திய தீவுகள் அணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியே இன்று மாலையில் தான் சேப்பாக்கம் மைதானத்திற்கு வர உள்ள நிலையில், மேற்கு இந்திய தீவுகள் அணி வீர‌ர்கள் காலை முதலே தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்