பி.சி.சி.ஐ.யின் ஆண்டு பொதுக்குழு இன்று கூடுகிறது

பி.சி.சி.ஐ.யின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெறுகிறது.
பி.சி.சி.ஐ.யின் ஆண்டு பொதுக்குழு இன்று கூடுகிறது
x
பி.சி.சி.ஐ.யின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெறுகிறது. பி.சி.சி.ஐ. தலைவராக கங்குலி பொறுப்பேற்ற பிறகு அவரது தலைமையில் நடைபெறும் முதல் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில், பி.சி.சி.ஐ.யின் அனைத்து நிர்வாகிககளும், மாநில கிரிக்கெட் சங்கங்களின் நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் நீதிபதி லோதா குழு அளித்த பரிந்துரைகள் திருத்தப்படுகின்றன. அதன் படி, தலைவர், செயலாளர் ஆகியோர் தொடர்ந்து இருமுறை பதவி வகுக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் பி.சி.சி.ஐ. தலைவராக கங்குலி வரும் 2024ஆம் ஆண்டு வரை நீடிப்பார். மேலும் ஐ.சி.சி. கூட்டத்தில் பி.சி.சி.ஐ.யின் பிரதிநிதியாக முன்னாள் தலைவர்  ஸ்ரீநிவாசனை நியமிக்க ஆண்டு பொதுக்குழுவில் அனுமதி வழங்கப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்