வங்கதேசத்துக்கு எதிரான பகல் இரவு டெஸ்ட் போட்டி : இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்தது.
வங்கதேசத்துக்கு எதிரான பகல் இரவு டெஸ்ட் போட்டி : இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
x
கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த போட்டியில் 246 ரன்கள் பின்னடைவில் 2-வது இன்னிங்சை ஆடிய வங்கதேசம், 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ் 5 விக்கெட்டும் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டும் வீழ்த்தினர் இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது, சிறப்பம்சமாக இந்த போட்டியில் 19 விக்கெட்களையும் வேகப்பந்து வீச்சாளர்களே கைப்பற்றியுள்ளனர். மேலும் தொடர்ச்சியாக கடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்சிஸ் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்