இந்திய - வங்கதேச கிரிக்கெட் அணிகள் பலப்பரீட்சை : 106 ரன்களில் சுருண்ட வங்கதேச அணி

வங்கதேசத்துடனான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து இந்திய அணி அசத்தியுள்ளது.
இந்திய - வங்கதேச கிரிக்கெட் அணிகள் பலப்பரீட்சை : 106 ரன்களில் சுருண்ட வங்கதேச அணி
x
வங்கதேசத்துடனான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள்  எடுத்து இந்திய அணி அசத்தியுள்ளது. கொல்கத்தாவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, இந்திய அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல்,106 ரன்களில் ஆட்டமிழந்தது. அந்த அணியில் 7 வீரர்கள் ஒற்றை இலக்கை ரன்களை கடக்காமல் ஆட்டமிழந்தனர். இந்திய அணியில், இஷாந்த் சர்மா 5 விக்கெட், உமேஷ் யாதவ் 3 விக்கெட், ஷமி 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். முதலில் சொதப்பிய இந்திய அணி புஜாரா, விராட் கோலியின் நேர்த்தியான ஆட்டத்தால் சற்று முன்னேறியது. கோலி 59 ரன்கள், ரஹானே 23 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்