இந்தியா Vs வங்கதேசம் - 2வது டெஸ்ட் : டாஸ் போடுவதற்கு பிரத்யேக தங்க நாணயம்

இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்குகிறது.
இந்தியா Vs வங்கதேசம் - 2வது டெஸ்ட் : டாஸ் போடுவதற்கு பிரத்யேக தங்க நாணயம்
x
இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்குகிறது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த பகல் இரவு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய வீரர்கள் மாலை நேரத்தில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர். இந்தியாவை பொறுத்தவரை இந்தூர் டெஸ்டில் களமிறங்கிய வீரர்களே இந்த போட்டியிலும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டிக்கு டாஸ் போடுவதற்கு பிரத்யேக தங்க நாணயம் பயன்படுத்தப்பட உள்ளது. டாஸை இந்தியா வென்றால் பேட்டிங் செய்வது நல்லது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர், இரவில் அங்கு பணி பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் தேனீர் இடைவேளைக்கு முன்பாகவே இந்திய வீரர்கள் அதிக ரன்கள் குவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக பெங்கால் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்