இந்தியா - வங்கதேசம் முதலாவது பகல் இரவு டெஸ்ட் போட்டி: பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் ஈடன் கார்டன் மைதானம்

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டி வரும் 22ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்தியா - வங்கதேசம் முதலாவது பகல் இரவு டெஸ்ட் போட்டி: பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் ஈடன் கார்டன் மைதானம்
x
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்தியா -  வங்கதேசம் இடையேயான முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டி வரும் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்பட உள்ளது. இதை முன்னிட்டு, பிங்க் நிறத்தில் பந்து போன்ற ராட்த பலூன் ஒன்று மைதானத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்கள் அமரும் இருக்கை பகுதி, ஸ்டேடியத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என ஈடன் கார்டன்ஸ் மைதானம் முழுக்க பிங்க் நிறத்தில் ஜொலிக்கிறது. இதனிடையே, போட்டியில் பங்கேற்க இந்திய- வங்கதேச வீரர்கள் கொல்கத்தா வந்தடைந்த நிலையில், இன்று வலை பயிற்சியில் ஈடுபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்