வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி : இந்தியா இமாலய வெற்றி

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி : இந்தியா இமாலய வெற்றி
x
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணியை, இந்திய அணி, 150 ரன்களில் சுருட்டியது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி, 493 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்த‌து. அதிகபட்சமாக இந்திய வீர‌ர் மயங்க் அகர்வால், 243 ரன்கள் குவித்தார். இதை தொடர்ந்து 2 வது இன்னிங்சில் களமிறங்கிய வங்கதேச அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் , 213 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்த‌து. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றி மூலம், 10 வது இன்னங்ஸ் வெற்றியை பெற்று கொடுத்துள்ள கேப்டன் கோலி, அதிக இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் என்ற தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்