இந்தியா Vs வங்கதேசம் டி - 20 தொடர் : 3வது போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி

வங்கதேச அணிக்கு எதிரான டி- 20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
இந்தியா Vs வங்கதேசம் டி - 20 தொடர் : 3வது போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி
x
நாக்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் ரோகித், தவான் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த போதிலும் , ராகுல் 52 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 62 ரன்களும் விளாசி அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 175 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 12 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 100 ரன்களுக்கு மேல் எடுத்ததால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால் துபே, சஹர் அற்புதமாக பந்துவீசி ஆட்டத்தின் போக்கை மாற்றினர், இறுதியில் வங்கதேசம் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது, 
ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் உட்பட 6 விக்கெட்கள் வீழ்த்தி  தீபக் சஹர் சர்வதேச டி -20 போட்டியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து அசத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்