முதல் முறையாக இந்திய அணியில் ந‌தீம் சேர்ப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் , இந்திய அணியில் ஷபாஸ் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார்.
முதல் முறையாக இந்திய அணியில் ந‌தீம் சேர்ப்பு
x
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் , இந்திய அணியில் ஷபாஸ் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் காயம் காரணமாக விலகிய நிலையில் , அணியில் சேர்க்கப்பட்ட நதீம், இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக களமிறக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொப்பியை இந்திய அணி கேப்டன் விராட் கோலியிடம் இருந்து பெற்று கொண்ட நதீம் , 296 வது வீர‌ராக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்