"தமிழ் என் தாய்மொழி" - மித்தாலி ராஜ் பெருமிதம்

தமிழனாக வாழ்வது பெருமை என கிரிக்கெட் விராங்கனை மித்தாலி ராஜ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
தமிழ் என் தாய்மொழி - மித்தாலி ராஜ் பெருமிதம்
x
தமிழனாக வாழ்வது பெருமை என கிரிக்கெட் விராங்கனை மித்தாலி ராஜ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வெற்றி கண்டதை அடுத்து சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அணியின் கேப்டன் மித்தாலி ராஜூக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள ரசிகர்கள் சிலர், அவருக்கு தமிழ் தெரியாது என்று குறிப்பிட்டுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள மித்தாலி ராஜ், தனக்கு தாய்மொழி தமிழ் என்றும், தமிழ் நன்றாக பேசுவேன் என்றும் தமிழில் பதிவிட்டுள்ளார். தமிழனாய் வாழ்வதில் பெருமைப்படுகிறேன் என்றும், அதே நேரத்தில் இந்தியனாய் இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்