உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சர்ச்சை : அதிக பவுண்டரி விதிமுறை நீக்கம்

உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் சர்ச்சையை ஏற்படுத்திய அதிக பவுண்டரி விதிமுறையை ரத்து செய்துள்ளது ஐசிசி.
உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சர்ச்சை : அதிக பவுண்டரி விதிமுறை நீக்கம்
x
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதிய இறுதி ஆட்டம் சமனில் முடிந்ததால், சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் இரு அணிகளும் தலா 15 ரன்கள் எடுத்ததால், ஆட்டத்தில் அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது தவறான நடைமுறை என கிரிக்கெட் வல்லுநர்கள், வீரர்கள் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் ஐசிசி அதிக பவுண்டரி விதிமுறையை ரத்து செய்து அதற்கு பதிலாக, புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. புதிய விதிமுறைப்படி ஐசிசி தொடர்களில் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களில் ஆட்டம் சமனில் முடிந்தால் சூப்பர் ஒவர் முறை கடைபிடிக்கப்படும் சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தால் முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவேர தொடரும் என்று தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்