உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி : புதிய சாதனை படைத்த மேரி கோம்

ரஷ்யாவில் நடந்த 11வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்று , உலக சாதனை புரிந்துள்ளார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரி கோம்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி : புதிய சாதனை படைத்த மேரி கோம்
x
ரஷ்யாவில் நடந்த 11வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் , வெண்கலம் வென்று , உலக சாதனை புரிந்துள்ளார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரி கோம். 3 குழந்தைகளுக்கு தாயான மேரி கோம் , 36 வயதிலும் தனது அயராத உழைப்பால் , உலக குத்துச் சண்டை அரங்கில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளார். இதற்கு முன்பு கியூபா வீரர் பெலிக்ஸ் சவோன் உலக குத்துச்சண்டையில் 6 தங்கம் , ஒரு வெள்ளி வென்றதே சாதனையாக இருந்தது, அதை தற்போது முறியடித்துள்ள  மேரி கோம் 6 தங்கம் , ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் கைப்பற்றி சர்வதேச அரங்கில் முத்திரை பதித்துள்ளார். 51 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில்  ஐரோப்பிய வீராங்கனை பஸ்னாஸ் - ஐ எதிர்கொண்ட மேரி கோம், தனது முழு அனுபவத்தை பயன்படுத்திய போதிலும் 1க்கு 4 என்ற கணக்கில் தோல்வியை தழுவி வெண்கலம் பெற்றார். தான் ஆக்ரோஷமாக ஆடி பஸ்னாஸ்- ஐ திணறடித்ததாக மேரி கோம் முறையிட்ட போதிலும் , நடுவர்கள் அதனை ஏற்க மறுத்தால் , கடந்த ஆண்டு வென்ற சாம்பியன் பட்டத்தை  தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என அதிருப்தி அடைந்தார். நடுவர்களின் தவறான முடிவால் பதக்கத்தை இழந்ததாக கூறும் மேரி கோம், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்  நிச்சயம் தங்கம் வெல்வேன் என குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்