தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : 395 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்த இந்தியா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 395 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : 395 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்த இந்தியா
x
விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியின்  4ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 431 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 71 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. மாயங் அகர்வால் 7 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 2வது இன்னிங்சிலும் சதம் விளாசினார். இதன் மூலம் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய முதல் போட்டியின் 2 இன்னிங்சிலும் சதம் விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார். புஜாரா 81 ரன்கள் சேர்க்க இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனையடுத்து 395 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. 4வது நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்துள்ளது. டிரா செய்ய தென்னாப்பிரிக்காவும், போட்டியை வெல்ல இந்தியாவும் போராடும் என்பதால் கடைசி நாள் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்