இந்தியா vs தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி : முதல் இன்னிங்சில் இந்தியா 502 ரன்களுக்கு டிக்ளேர்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில்,2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி : முதல் இன்னிங்சில் இந்தியா 502 ரன்களுக்கு டிக்ளேர்
x
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில், 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் 2 விக்கெட்டும், ஜஜேடா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். முன்னதாக, டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால் 215 ரன்களும், ரோகித் சர்மா 176 ரன்களும் விளாசினர், மேலும் டெஸ்ட் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் எடுத்த 3வது இந்திய தொடக்க இணை என்ற சாதனையை ரோகித் மற்றும் அகர்வால்
படைத்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்