"விளையாட்டு அரங்கில் பெண்களை அனுமதிக்க வேண்டும்" - ஈரான் அரசுக்கு கால்பந்து சங்க தலைவர் கோரிக்கை

கால்பந்து அரங்கில் பெண்களை அனுமதிக்குமாறு ஈரான் அரசை சர்வதேச கால்பந்து சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
விளையாட்டு அரங்கில் பெண்களை அனுமதிக்க வேண்டும் - ஈரான் அரசுக்கு கால்பந்து சங்க தலைவர் கோரிக்கை
x
கால்பந்து அரங்கில் பெண்களை அனுமதிக்குமாறு ஈரான் அரசை சர்வதேச கால்பந்து சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. 1979ம் ஆண்டு முதல் போட்டிகளை நேரில் பார்க்க பெண்களுக்கு ஈரான் அரசு தடை விதித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் தடையை விலக்க கோரி, பெண் ரசிகை ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார். இந்நிலையில், அடுத்த மாதம் உலக கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று போட்டிகள் ஈரானில் நடைபெற உள்ளன. எனவே, இந்த தருணத்தில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என ஃபைபா தலைவர் கியானி இன்பான்டினோ வலியுறுத்தி உள்ளார். இந்த கோரிக்கைக்கு கால்பந்து ரசிகைகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்