2-வது டெஸ்ட் - மேற்கிந்திய தீவுகளுக்கு, இந்திய 468 ரன்கள் இலக்கு

2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 468 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது
2-வது டெஸ்ட் - மேற்கிந்திய தீவுகளுக்கு, இந்திய 468 ரன்கள் இலக்கு
x
கிங்ஸ்டன் சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும்  இந்த டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. 

பின்னர், தனது முதல் இன்னிங்சை ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்று 3-ஆம் நாள் ஆட்டத்தின்போது 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் பும்ரா ஹாட்ரிக் சாதனையுடன் 6 விக்கெட்டுகளும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஹாமில்டன் விக்கெட்டை வீழ்த்திய இஷாந்த் சர்மா, ஆசியாவுக்கு வெளியே அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை படைத்தார். கபில்தேவ், ஆசியாவுக்கு வெளியே 155 விக்கெட் வீழ்த்தியிருந்தார். 156 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் கபில்தேவின் சாதனையை இஷாந்த் முறியடித்தார்.

முதல் இன்னிங்சில் 299 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், தொடர்ந்து தனது 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 
4 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்தபோது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ரகானே 64 ரன்களுடனும், விஹாரி 53 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனை அடுத்து  468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆட தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. 2 நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில், அந்த அணி வெற்றிபெற இன்னும் 423 ரன்கள் தேவைப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்