மே.இ. தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் : முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 264-5

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
மே.இ. தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் : முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 264-5
x
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கிங்ஸ்டனில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள், இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. இந்திய வீரர்கள் ராகுல், புஜாரா ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற, மாயங் அகர்வால் மற்றும் கேப்டன் கோலி பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தனர். அகர்வால் 55 ரன்களிலும், கோலி 76 ரன்களிலும் வெளியேற, முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. விஹாரி 42 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்