மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் - 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் - 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா
x
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.டாஸில் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச தீர்மானித்த‌து. இதைதொடர்ந்து  களமிறங்கிய இந்திய அணியில், லோகேஷ் ராகுல் மட்டும் சற்று தாக்குபிடிக்க, புதிய தொடக்க ஆட்டக்கார‌ர் மயங்க் அகர்வால், இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் புஜாரா, கேப்டன் கோலி என மூன்று முக்கிய வீர‌ர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறி, அதிர்ச்சி அளித்தனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே, 81 ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி, 203 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. மேற்கு இந்திய தீவுகள் அணியின் கிமார் ரோச் 3 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்