இந்தியா VS வெஸ்ட்இண்டீஸ் ஏ : பயிற்சி ஆட்டம் டிரா

ஆன்டிகுவாவில் நடைபெற்ற இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு இடையேயான 3 நாள் பயிற்சி ஆட்டம் டிரா ஆனது,
இந்தியா VS வெஸ்ட்இண்டீஸ் ஏ : பயிற்சி ஆட்டம் டிரா
x
போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் புஜாரா சதம் விளாசினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி 181 ரன்னில் ஆல் அவுட் ஆனது. 116 ரன்கள் முன்னிலையுடன் 2 வது தொடங்கிய இந்தியா 78 ஓவர்கள் விளையாடி 188 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு 305 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இறுதி நாளில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நேரம் முடிந்ததால் ஆட்டம் டிரா ஆனது., இதே மைதானத்தில் வருகிற 22 ஆம் தேதி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்